செய்திகள்

'கிழிந்த ஆடைகளை பணக்காரர்கள் அணிந்தால்...': பூஜா ஹெக்டேவை விமர்சித்த ரசிகர் 

நடிகை பூஜா ஹெக்டே உடுத்தியிருந்த ஆடையை ரசிகர் இன்ஸ்டாகிராமில் விமர்சித்துள்ளார். 

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார். 

இன்ஸ்டாகிராமில் பூஜாவின் புகைப்படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் அவர் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு ரசிகர், “கிழிந்த ஆடைகளை ஏழைகள் அணிந்தால் அது ஏழ்மை; பணக்காரர்கள் அணிந்தால் பேஷன்” என கமெண்ட் செய்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT