முகப்பு
செய்திகள்

கேஜிஎஃப், காந்தாரா தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஃபகத் பாசில்! 

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஃபகத் பாசில் நடிக்க உள்ளார். 

Updated On : 17 ஏப்ரல், 2023 at 6:20 PM
பகிர்:

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் ஃபகத் பாசில் நடிக்க உள்ளார். 

மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஃப்கத் பாசில். பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் படங்களில் நடித்துள்ளார். கன்னட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே ஃபிலிம்ஸ் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நிறுவனமாகும். கேஜிஎஃப் படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு காந்தாரா படம் இன்னுமொரு பெரிய வெற்றியை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தயாராகி வருகிறது. 

இந்நிலையில் நடிகர் ஃப்கத் பாசில் கதாநாயகனாக புதிய படத்தினை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தாயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெயர் ‘தோமம்’. இந்தப் படத்தில் சூரறைப் போற்று கதாநாயகி அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். 

Advertisement

சமந்தா நடித்த ‘யு டர்ன்’ படத்தினை இயக்கிய இயக்குநர் பவன் குமார் இந்தப் படத்தினை இயக்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.