செய்திகள்

நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு!

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

DIN

நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் விஜய்க்கு நண்பன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார்.

தொடர்ந்து, பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வரும் இலியானா, கடைசியாக பிக் புல் படத்தில் நடித்திருந்தார். தற்போது அன்ஃபேர் அண்ட் லவ்லி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். குழந்தையின் ஆடைப் புகைப்படம் மற்றும் தான் அணிந்திருக்கும் அம்மா என எழுதப்பட்டிருக்கும் செயினின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, இலியானாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிலர் உங்களுக்கு எப்போது திருமணமானது, குழந்தையின் தந்தை பெயர் என்ன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்த இலியானா, கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.

இந்நிலையில், சமீபகாலமாக நடிகை காத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கர்ப்பமாக இருப்பதாக இலியானா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT