செய்திகள்

பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு இதயங்களை பறக்க விடும் ரசிகர்கள்! 

நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதேபோன்று பாலிவுட்டிலும் மொஹஞ்சதாரோ' என்ற படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் உடன் 'சர்க்கஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்கிறார். 

இன்ஸ்டாகிராமில் பூஜாவின் புகைப்படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் அவர் பகிர்ந்த சிகப்பு நிற ஆடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் கமெண்ட்டில் இதயங்களை பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 மணி நேரத்தில் 3 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT