செய்திகள்

'மன உளைச்சலில் இருக்கிறேன்’: விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்கிற வழக்கில் விஜய் ஆண்டனி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

DIN

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்கிற வழக்கில் விஜய் ஆண்டனி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகா் விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இப்படத்தின் கதை 2016-ல் தங்கள் தயாரிப்பில் வெளியான ‘ஆய்வுக்கூடம்’ படத்திலிருந்து திருடப்பட்டதாக ராஜகணபதி என்பவர் தடை கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இந்நிலையில், விஜய் ஆண்டனி தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் ‘ ஆய்வுக்கூடம் படத்திற்கும் பிச்சைக்காரன் 2-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்ததால் நஷ்டத்தில் உள்ளேன். இதனால், கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். திட்டமிட்டே இப்படத்திற்கு எதிராக தடை வழக்குகள் போடப்படுகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT