செய்திகள்

‘ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குற்றமல்ல; தேவை’- தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர்! 

DIN


'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்ற ஹிந்தி திரைப்படம் 1990ல் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் காஷ்மீர் இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கொல்லப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. விவேக் அக்னிஹோத்ரி இதனை எழுதி இயக்கியிருந்தார். அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரபோர்த்தி, பல்லவி ஜோஷி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.  பாரதிய ஜனதாக் கட்சி வரி விலக்கு அளித்ததும் பெரும் விவாதத்தினை ஏற்படுத்திய படமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனுக்கள் மீதான அரசியல் சாசன அமர்வு விசாரணை இன்று தொடங்கியது. மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா முறையிட்டார். அவர் கூறும்போது, இது போன்ற திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தனிப்பட்ட சட்டங்களுக்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்புகளுக்கும் இடையேயான சம நிலையை பாதிக்கும் வகையில் அமையும். திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்குவது முற்றிலும் சட்டம் இயற்றும் அரசமைப்புடன் தொடர்புடையது. இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா? என்று முதலில் ஆராய வேண்டும் என்றார். அப்போது மத்திய அரசின் இந்த கோரிக்கை இன்று பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

ஒரே பாலினத்தவர்களின் திருமணம் நகர்புற மேட்டிமைத்தனம் கிடையாது. அது மனிதர்களின் தேவை. ஒரே பாலினத்தவர்களின் திருமணம் என்பது கருத்து கிடையாது. தேவை. இன்னும் சொல்லப்போனால் அது மனித உரிமை. இந்தியா போன்ற முன்னேறும், தாராளமான, வளர்ச்சியுறும் நாட்டில் ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குற்றமாக்கக் கூடாது; சாதாரணமாக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

SCROLL FOR NEXT