செய்திகள்

கிழக்கு வாசல் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

DIN

கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நடிகர் சஞ்சீவ் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

கிழக்கு வாசல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகுவதாக வதந்தி பரவிய நிலையில், சமீபத்தில், அவர் கிழக்கு வாசல் தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "அனைவருக்கும் வணக்கம், நான் கிழக்கு வாசல் சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். கிழக்கு வாசல் சீரியலில் முத்து கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு நன்றி. ராதிகா சரத்குமார் மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் ஆகியோரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். உங்களை வேறொரு திட்டத்தில் சந்திக்கிறேன் நன்றி." என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் வெங்கட் தொலைகாட்சி மற்றும் சினிமா இரண்டிலும் நன்கு அறியப்பட்ட முகம். 'திருமதி செல்வம் (2007-2013)' என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.  செல்வம் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தொடர்ந்து மெட்டி ஒலி, நம்பிக்கை, அண்ணாமலை, அவர்கள், ஆனந்தம், அகல்யா, மனைவி, வேப்பிலைக்காரி, மை டியர் பூதம், பெண், சித்தி 2 ஆகிய தொடர்களில் சஞ்சீவ் நடித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT