செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் அடுத்த முக்கிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வார நாள்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இரவு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. 

சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன், விஜே தீபிகா, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

சமீபத்தில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த கொண்டிருந்த சாய் காயத்ரிக்கு பதிலாக, ஏற்கனவே அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜே தீபிகா மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சரவண விக்ரம் படவாய்ப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி, கண்ணன் கதாபாத்திரத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துவரும் நவீன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT