முகப்பு
செய்திகள்

ரூ.100 கோடி வசூலில் சல்மான் கானின் புதிய திரைப்படம் 

நடிகர் சல்மான் கான்  நடிப்பில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
பகிர்:

தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹிட்டடித்த வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'கிசி கா பாய் கிசி கிஜான்' ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளது. 

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து 2014ல் வெளியான திரைப்படம் வீரம். தமிழில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்தப் படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இதை ஹிந்தியில் சல்மான் கான் ரீமெக் செய்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். 

ரம்ஜானுக்கு வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 112.80 கோடி வசூலானதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.