முகப்பு
செய்திகள்

வைரலாகும் ஆர்எக்ஸ்100 பட இயக்குநரின் புதிய போஸ்டர் 

பிரபல தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதியின் செவ்வாய்கிழமை படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

2018இல் வெளியான ஆர்எக்ஸ்100 படம் தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதன் ஒரிஜினலான கதை சொல்லும்பாணி வழக்கமான தெலுங்கு சினிமாவில் இருந்து மாற்யிருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர்தான் அஜய் பூபதி. இவரது இரண்டாவது படம் கரோனா காலகட்டத்தில் தாமதமாகி வெளியாகியது. 

தற்போது அஜய் பூபதியின் 3வது படம் மங்கலாவாரம். தமிழில் செவ்வாய்கிழமை. இந்தப் போஸ்டரில் கதாநாயகி பயல் ராஜ்புட் ஆடையின்றி முதுகை காண்பித்தபடி இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை அஜய் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியப் படமாக உருவாக உள்ளது. 


இந்தப் படம் 90களில் கிராமத்தில் நடைபெறும் த்ரில்லர் கதையாக உருவாகிவருகிறது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத வகைமையில் இந்தப் படம் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. உயர்தரமான தொழில்நுட்பங்களுடன் படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜனீஷ் ஏக்நாத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.