செய்திகள்

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டில் நுழைந்த 2 பேர்!

குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியில் வைல்டு கார்டின் மூலம் 2 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதற்கான ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

DIN

குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியில் வைல்டு கார்டின் மூலம் 2 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதற்கான ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். ரக்சன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கோமாளிகளாக புகழ், சுனிதா, தங்கதுரை, சிங்கபூர் தீபன், பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

குக்குகளில் கிஷோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின் வெளியேறியுள்ள நிலையில், தற்போது சிவாங்கி, விசித்ரா, ஆன்ட்ரியன், மைம் கோபி, சுருஸ்டி ஆகியோர் குக்குகளாக பங்கேற்று வருகின்றனர். சென்ற வாரம் நடந்த எலிமினேஷன் சுற்றில் ஷெரின் வெளியேறினார். 

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் வைல்டு கார்டின் மூலம் புதிதாக 2 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் மற்றும் கலை இயக்குநர் கிரண் ஆகிய 2 பேர் குக்குகளாக களமிறங்கியுள்ளனர்.

வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT