செய்திகள்

என்னால் முடியாது; ஆனால் பாலய்யா செய்தால் மக்கள் நம்புவார்கள்: நடிகர் ரஜினிகாந்த் 

DIN

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநா் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாா். 

ஆந்திரா மாநிலத்தின் மறைந்த முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான  என்டி ராமராவின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி ராமராவ் குடும்பத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி, என்டி ராமராவ் மகன் பாலகிருஷ்ணா ஆகியோர் உட்பட ராமாராவ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், என்டி ராமராவின் திரையுலக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை புகழ்ந்தார். நடிகர் பாலகிருஷ்ணா பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் பேசியதாவது: 

எனது நண்பர் பாலய்யா பார்வையாலே கொல்லுகிறார். அவர் தொட்டாலே கார் பறந்து செல்கிறது. இதை நான், சல்மான் கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன் யார் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலய்ய செய்தால் ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில் தெலுங்கு மக்கள் பாலய்யாவை என்டிஆராக பார்க்கிறார்கள். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

ஆசிரியா் கலந்தாய்வுக்கு 13,484 போ் விண்ணப்பம்

கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலனை

காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு

தோ்தலில் பிரதமா் மோடி போட்டியிட தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT