செய்திகள்

கமலுக்கு ஜோடியாகும் வித்யா பாலன்? 

நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. தற்போது கமல் இந்தியன் 2 படத்தின் பிஸியாக நடித்து வருகிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிந்தியில் பிரபலமான நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவினை பெற்றவர். நேர் கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

முதலில் நடிகை நயன்தாரவை நடிக்க வைக்க திட்டமிட்டதாகவும் பின்னர் அவர் ஒத்துக்கொள்ளாததால் வித்யா பாலனை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT