செய்திகள்

ஹாட்டாக இருக்கிறீர்கள்: கீர்த்தி சுரேஷை பாராட்டிய ஸ்ரேயா! 

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய புகைப்படத்தினை நடிகை ஷ்ரேயா பாராட்டியுள்ளார். 

DIN

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். தசரா வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

நடிகை ஸ்ரேயா தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு 'அழகிய தமிழ்மகன்’, 'சிவாஜி’, ‘கந்தசாமி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதன்பின், ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரேய் கோச்ஷிவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். தற்போது ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். 

ஆரம்பத்தில் இருந்ததை விடவும் உடலை குறைத்த கீர்த்தி சுரேஷ் மிகவும் மெலிந்து போயிருந்தார். தற்போது மீண்டும் அழகாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கீர்த்தி பகிர்ந்த புதிய புகைப்படங்களை ரசிகர்கள் ஹார்டின் மழையில் நனைய வைத்துள்ளனர். இந்த பதிவிற்கு நடிகை ஷ்ரேயாவும், “ஹாட்னஸ்” என கமெண்ட் செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT