செய்திகள்

போர் தொழில் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஜூன் மாதம் வெளியான ’போர் தொழில்’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று 50-வது நாளை நிறைவு செய்துள்ளது.

அசோக் செல்வன், சரத் குமார் ஆகியோரின் நடிப்பும் நல்ல கதையுமாக உருவான இப்படம் உலகளவில் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில்.  சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT