உருவாகிறது சுழல் தொடரின் இரண்டாம் பாகம்!
சுழல் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான இணையத் தொடர் - சுழல். (Suzhal: The Vortex). தயாரிப்பு - புஷ்கர், காயத்ரி.
இந்த இணையத் தொடர் கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதையும் படிக்க: என்னை ஆள்வைத்து அடித்தார் வடிவேலு: பிரபல நடிகர் வேதனை!
Advertisement
Advertisement
கிரைம் திரில்லர் பாணியில் உருவான இத்தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதையும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.