செய்திகள்

10 கோடி பார்வைகளைக் கடந்து காவாலா பாடல் சாதனை

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் யூடியூபில் வெளியாகி 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

DIN

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் யூடியூபில் வெளியாகி 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அனிருத் இசையில் முதல் பாடல் அண்மையில் வெளியானது.

‘காவாலா’ எனத் தொடங்கும் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் வைரலான ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள காவாலா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் காவாலா பாடல் யூடியூபில் வெளியான நான்கு வாரங்களில் 10 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை இணையதளங்களில் காவாலா100m என்ற ஹேஷ்டேகுடன் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT