கோப்புப் படம். 
செய்திகள்

பாஜக நிகழ்வில் பங்கேற்றது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல: புஸ்ஸி ஆனந்த் 

மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

DIN

மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அதன்படி ராமநாதபுரத்தில் கடந்த 28ஆம் தேதி நடைப்பயணத்தை தொடங்கிய அவர் 110-வது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். தற்போது அவர் மதுரையில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் அண்ணாமலை நடைப்பயணத்தில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன்  சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வெளியானது. இந்த நிலையில் மாற்றுக்கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அல்ல என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் மக்கள் இயக்கக் கொடியோடு மாற்றுக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை, மற்றும் அவர்களுக்கும் மக்கள் இயக்கத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் விஜய் அரசியலில் விரைவில் களமிறங்குவார் என கூறப்படும் நிலையில் பாஜக நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் சிலர் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

SCROLL FOR NEXT