மீண்டும் வெப் தொடரில் நடிகர் விமல்!
மீண்டும் வெப் தொடர் ஒன்றில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் வெப் தொடர் ஒன்றில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் புதிய வெப் தொடர் ஒன்றில் நடிகர் விமல் நடித்து வருகிறார். இத்தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த வெப் தொடரை ராமு செல்லப்பா இயக்குகிறார்.
இதையும் படிக்க: மீண்டும் சீரியலில் களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்!
கடந்த மாதம் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.