நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில் இருக்கிறது.
இந்நிலையில், லியோ படத்தின் இசைவெளியீட்டு விழாவானது செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், துபை மற்றும் மலேசியாவில் லியோ படத்துக்கான நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.