எஸ்.ஏ.சந்திரசேகர் 
செய்திகள்

எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் சீரியல்! இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது!!

மறைந்த மூத்த நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 

DIN

நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் முதல்முதலில் சின்னத்திரையில் நடிக்கும் தொடர் கிழக்கு வாசல். இந்தத் தொடர் இன்று முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் அவ்வபோது புதிய தொடர்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பாரதி கண்ணம்மா -2 தொடர் கடந்த வாரத்துடன் முடிந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் நாளான இன்றுமுதல் (திங்கள் கிழமை) கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்முறையாக சின்னத்திரை தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். மறைந்த மூத்த நடிகர் நாகேஷ் மகன் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். 

ஆனந்த் பாபு ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். சூலம், குலவிளக்கு, மனைவி, கஸ்தூரி, மெளன ராகம், முத்தழகு, மெளன ராகம்-2 போன்ற தொடர்களில் ஆனந்த் பாபு நடித்துள்ளார். 

கிழக்கு வாசல் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழின் பூவே பூச்சூடவா தொடரில் நடித்து புகழ் பெற்றவர். 

ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார். இந்தத் தொடரில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பதால் இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT