முகப்பு
செய்திகள்

இரண்டு பாகங்களாக வெளியாகும் லியோ?

லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருக்கிறது.

மேலும், லியோவிற்காக மீண்டும் சில காட்சிகளை எடுக்க படக்குழு காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜய் கலந்துகொள்ளவில்லை என்றும் தகவல்.

இந்நிலையில், லியோ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் இது கைதி - 2 படத்தின் கதையுடன் இணைந்து உருவாக உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →