செய்திகள்

அட்லி படத்தில் வாமிகா கபி!

பாலிவுட் நடிகை வாமிகா கபி அட்லி தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்.

DIN

பாலிவுட் நடிகை வாமிகா கபி தமிழில் 'மாலை நேரத்து மயக்கம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில்  ‘மாடர்ன் லவ் சென்னை’ தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ படத்தில் நடித்திருந்தார்.

ஹிந்தி, பஞ்சாபி மொழி படங்களில் அதிகம் நடித்து வரும் வாமிகா சமீபத்தில் அமேசானில் வெளியான ‘ஜூப்ளி’ இணையத் தொடரில் அற்புதமாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். சோனி லைவிலும் ‘சார்லி சோப்ரா’ எனும் புதிய தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இதையும் படிக்க: விரைவில் அயலான் டீசர்!

தற்போது ஜெயம் ரவியுடன் ‘ஜீனி’ படத்தில் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ள ‘இரவாக்காலம்’  படம் வெளியாகாமல் இருக்கிறது. 

இந்நிலையில், தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகன் வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அட்லி தயாரிப்பில் காளீஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT