வெளியானது சந்திரமுகி - 2 முதல் பாடல்
சந்திரமுகி - 2 படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி-1 திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.
லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி. மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.19) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
Advertisement
இதையும் படிக்க: விஜய் - 68 படப்பிடிப்பு எப்போது?
இந்நிலையில், சந்திரமுகி - 2 படத்தின் முதல் பாடலான 'ஸ்வகத்தாஞ்சலி' பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.