செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு

தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  

DIN

தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மழை காரணமாக ரசிகர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு கருதி இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இசை நிகழ்ச்சிக்கான புதிய தேதி மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது. 

இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT