செய்திகள்

ரன்வீர் சிங்-ஆலியா பட் திரைப்படம்: ரூ.250 கோடி வசூல்! 

DIN

ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர் கரண் ஜோஹர். ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் எடுத்த கே2ஹெச்2 எனும் குச் குச் ஹோடா ஹேய் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் பல படங்களை தயாரித்து 9 படங்களையும் இயக்கியுள்ளார். 

தற்போது பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட், ரன்வீர் சிங் வைத்து ராக்கி அர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தினை இயக்கியுள்ளார். வியாகோம் 18, தர்மா புரடக்‌ஷன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தின் டீசரை நடிகர் ஷாருக்கான் வெளியிட்டு இருந்தார். 

காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படம் நகைச்சுவை கலந்து சிறந்த  பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆலியா பட் ரன்வீர் ஜோடி கல்லி பாய் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படமும் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ராக்கி அர் ராணி கி ப்ரேம் கஹானி படத்தினை நடிகை கஜோல் உள்ளிட்ட பல ஹிந்தி சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். ஜூலை 28இல் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்தேன்; மனம் திறந்த ஆர்சிபி வீரர்!

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

SCROLL FOR NEXT