செய்திகள்

நடிகர் தனுஷுடன் கூட்டணி எப்போது?: நெல்சன் கூறிய அப்டேட்!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு இயக்குநர் நெல்சன் பதிலளித்துள்ளார். 

DIN

நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நிற்க மீண்டும் தொலைக்காட்சியிலேயே வேலைக்கு சென்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வாழ்க்கை இளைஞர்கள் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. 

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் அமோக வெற்றி பெற்றது. நடிகர் விஜய்யுடன் எடுத்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் நெல்சன் மிகவும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் நாள் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றன. ஒரே நாளில் உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக குறித்த கேள்விக்கு இயக்குநர் நெல்சன் பதிலளித்துள்ளார். அதில் நெல்சன், “டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் படங்கள் தொடர்ந்து இயக்கியுள்ளேன். கொஞ்சம் நாள்கள் இடைவெளி எடுத்து விட்டு பின்னர்தான் யோசிக்க வேண்டும். நடிகர் தனுஷுடன் படம் இன்னும் கமிட் ஆகவில்லை. இணையத்தில் வரும் தகவல்கள் எல்லாம் உண்மையில்லை. இனிமேல்தான் அடுத்தப் படம் குறித்து யோசிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.  

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பினை முடித்து தனது 50வது படத்தினை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT