செய்திகள்

எல்லா வகையிலும் சிறந்த மனிதர் இவர்தான்: நடிகை கங்கனா ரணாவத் நெகிழ்ச்சி! 

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனக்கு பிடித்தமான நடிகரை பற்றிக் கூறியுள்ளார். 

DIN

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எம்ர்ஜென்சி படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் நவ.24ஆம் நாள் வெளியாக உள்ளது. 

தமிழில் தலைவி என்ற இணையத் தொடருக்குப் பின் மீண்டும் களமிறங்கியுள்ளார். 

ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை கங்கனாவும் நடித்துள்ளார். இந்தப் படம் செப்.19ஆம் நாள் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

தனது துணிச்சலான கருத்துகளால் அடிக்கடி சர்சையில் சிக்கிக் கொள்வது இவரது வழக்கம். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஜான் ஆப்ரஹாம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில் கங்கனா , “சினிமாவில் உள்ள மோசமான பல நபர்கள் குறித்து பேசியுள்ளேன். ஆனால் அதே சமயம் மிகவும் நல்லவரான இவரைக் குறித்தும் பேச வேண்டும். ஜான் ஆப்ரஹாம் குறித்து பேச வார்த்தைகளே இல்லை. அவர் அவ்வளவு நல்ல மனிதர். அவரை குறித்து புகழ்ந்து பேச மீடியாவிற்கு அவர் பணம் தருவதில்லை. புரமோஷ்னல் செய்யாத மனிதர். பெண்களை அவமதிக்காத மனிதர். எந்த வட்டத்திலும் இல்லாத அற்புதமான மனிதர். 

சினிமா நடிகர் நடிகைகளுக்கு வீடு பார்த்துதரும் ஏஜெண்ட் ஒருவர், “கார் ஓட்டுநர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களை தனது குடும்பமாக மதிப்பது ஜான் ஆப்ரஹாம், கங்கனாவும்தான்” என ஒருமுறை அவரே எனது மேலாளிடம் கூறியுள்ளார். 

தன்னை தானே உருவாக்கிய மனிதர். சிறந்த நடிகர், தயாரிப்பாளர், மாடல் மட்டுமல்ல எல்லா வகையிலும் வெற்றி பெற்ற மனிதர் ஜான் ஆப்ரஹாம்” எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT