முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரைலர்! 

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:49 AM
பகிர்:

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மம்தா மோகன்தாஸ் நடிக்க வேண்டிய படத்தில் அதிதிபாலன் நடித்துள்ளார்.  பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் நடிக்க வேண்டிய தேதி வீணாகி விட்டது. பின்னர் அவர் கால்சீட் கிடைக்காததால் அவருக்கு பதில் அதிதி பாலன் நடித்தார். 

மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம். இந்த வரிசையில் தற்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு "கருமேகங்கள் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஈ.வீரசக்தி தயாரிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைதுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தந்தையர் தினத்தினை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியானது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →