செய்திகள்

லியோ அடுத்த அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் அர்ஜுன் பிறந்தநாளான இன்று லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் விடியோவை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதற்காக,  ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற அர்ஜுன் கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, லியோ படக்குழு  சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆண்டனி தாஸ்’ என்கிற அவர் கதாபாத்திரத்திர கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

30 கோடி பார்வைகளை கடந்த வைரல் விடியோ...யார் இந்த ராகுல் காந்தி!

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT