நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.
இந்நிலையில், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
எந்திரன், கபாலி, 2.0 திரைப்படங்களை தொடர்ந்து, ரஜினியின் நான்காவது படமாக ஜெயிலர் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நடிப்பில் அசத்தும் வின்சி அலோஷியஸ்!
மேலும், படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன், ‘ ரஜினி சார் ஜெயிலர் படத்தை பார்த்தபின் படம் எப்படி இருக்கிறது? எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘நான் நினைத்ததைவிட 10 மடங்கு நன்றாக இருக்கிறது. இதை எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறினார் என்பதைக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.