செய்திகள்

காவாலா பாடலுக்கு நடனமாடிய ஜப்பான் தூதர்!

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அசத்தலாக நடனமாடி வைரலாகியுள்ளார்.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் இடம்பெற்று உலகளவில் பிரபலமடைந்த காவாலா பாடலுக்கு பலரும் நடனமாடி விடியோவை வெளியிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி,  ‘ரஜிகாந்த்தின் மீதான என் அன்பு எப்போதும் தொடரும்’ என காவாலா பாடலுக்கு நடனமாடிய விடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது, இது வைரலாகி வருகிறது.

ஜப்பான் தூதர் ஹிரோஷி சுஸுகி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT