ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ரஜினி சந்திப்பு 
செய்திகள்

ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் ரஜினி சந்திப்பு!

ஜார்கண்ட் ஆளுநரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

DIN

ராஞ்சி: ஜார்கண்ட் ஆளுநரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு ஒருநாள் முன்னதாகவே அவர் இமயமலை புறப்பட்டுச் சென்றார்.

இமயமலையில் உள்ள பல்வேறு ஆன்மிகத் தலங்களில் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினிகாந்த் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், “ராஞ்சிக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தலை சிறந்த நடிகரில் ஒருவரும், மனிதநேயமிக்க சூப்பர் ஸ்டாருமான எனது அன்பு நண்பர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களில் ரஜினிகாந்த் வழிபாடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT