செய்திகள்

தமன்னாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது, நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் நெட்பிளிக்ஸில்  வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரில் தமன்னா இடம்பெற்றுள்ள காட்சிகள் பயங்கர கவர்ச்சியாக இருந்ததாலும் காவாலா பாடலாலும் அவர் டிரெண்ட் ஆகியிருந்தார்.

,மேலும், முன்னணி நாயகியாக இருந்தாலும் அவருக்குப் பின்  நடிக்க வந்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் இடத்தை தமன்னாவால் பிடிக்க முடியவில்லை. 16 ஆண்டுகளாக சினிமாவிலிருப்பவர் ஒரு படத்திற்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடிக்கும் மேல் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டிற்கு ரூ.12 கோடி வரை வருவாய் ஈட்டும் அவர் மும்பையில் ரூ.16 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும் சொந்தமாக நகைக் கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு! 65 பேர் பலி

ஆபாசம், அருவருப்பு... 3 ஆண்டுகளாக நடிகை ரவீனாவை துன்புறுத்தும் இரட்டைச் சகோதரர்கள்!

கமல்ஹாசனின் பேச்சால் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது: தமிழிசை

வார இறுதியில் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு!

அழகு என்ற சொல்லுக்கு...

SCROLL FOR NEXT