செய்திகள்

என்னுடைய ஆக்‌ஷன் படத்தினைவிட துல்கரின் படம் நன்றாக ஓடும்: விஜய் தேவரகொண்டா நம்பிக்கை!

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது முந்தைய படமான பூரி ஜெகநாத் இயக்கிய லைகர் திரைப்படம் மோசமான விமர்சனங்களை எதிர் கொண்டன. தற்போது சமந்தாவுடன் காதல் படமான குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார். 

நடிகர் துல்கர் சல்மானின் முந்தைய படம் காதல் படமான சீதா ராமம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது ஆக்ஷன் படமான கிங் ஆஃப் கோதா படம் வெளியாக உள்ளது. 

துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா இருவரும் சந்தித்து தனது அடுத்த படங்களுக்கான புரமோஷனை செய்தார்கள். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, “என்னுடை முந்தைய ஆக்‌ஷன் திரைப்படத்தினைவிட உங்களது படம் நன்றாக ஒடுமென நம்புகிறேன்” என ஜாலியாக கூறினார். இதற்கு நடிகர் துல்கர் சல்மான், “என்னுடைய முந்தைய படம்போல உங்களது காதல் படமும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார். 

சமந்தா விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்.1ஆம் நாள் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா ஆக.24ஆம் நாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

துல்கர்-விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கவில்லை. துல்கரின் ஆனால் மகாநடி படத்தில் விஜய் தேவரகொண்டா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படங்களை தாண்டி இருவர்களும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

‘ஹீராமண்டி’ வெற்றிக் கொண்டாட்டம்!

சிரிக்கும் நபர்கள் எப்போதும் கண்ணுக்கு விருந்தானவர்கள்!

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT