செய்திகள்

காதலியை கரம்பிடித்தார் நடிகர் கவின்! 

நடிகர் கவின் தனது நீண்டநாள் காதலி மோனிகாவை கரம்பிடித்தார். 

DIN

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட கவினும் லாஸ்லியாவும் நெருக்கமாக பழகி வந்தனர். விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் அப்பா அவரைக் கண்டித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஒருவரைப் பற்றி மற்றொருவர் பேசுவதை தவிர்த்து வந்தனர். அதன்பின், அவர்கள் பிரிந்துவிட்டதை லாஸ்லியா உறுதிசெய்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் தனது நீண்டநாள் காதலி மோனிகாவை கரம்பிடித்துள்ளார். ரசிகர்களும் பிரபலங்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT