பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிய முக்கிய பிரபலம்!
பாக்கியலட்சுமி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார்.
பாக்கியலட்சுமி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரிலிருந்து அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரித்திகா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ரித்திகா தரப்பில் இருந்து உறுதிபடுத்தப்பட்ட தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க: பிக் பாஸ் சீசன் 7 தொடங்கும் தேதி குறித்த தகவல்!
ரித்திகா நடித்துவந்த கதாபாத்திரத்தில் அக்ஷிதா அசோக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அக்ஷிதா காற்றுக்கென்ன வேலி தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.