செய்திகள்

லியோவில் நடித்தீர்களா? நிவின் பாலி பதில்!

லியோ திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகர் நிவின் பாலி பதிலளித்துள்ளார்.

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' விஜய் குரலில் வெளியாகி சமூக வலைதளங்களில் இன்றளவும் டிரெண்டிங்கில்  இருக்கிறது.

சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

இதற்கிடையே, இப்படத்தில் நிவின் பாலியும் நடித்திருப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நிவினிடம், “நீங்கள் லியோவில் நடித்திருப்பதாக வதந்தி வெளியானது. உண்மையா?” எனக் கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு நிவின் பாலி, ‘அது வதந்தியாகவே இருக்கட்டும்’ எனப் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் படத்திலிருந்து வெளியேறியது ஏன்? கைதி - 2 என்ன ஆனது? லோகேஷ் பதில்!

ஆளுநர் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

தேர்தல் பணியாற்ற உறுதியேற்போம்: தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிமுக Vs தவெக! எல்லைமீறும் விர்ச்சுவல் வாரியர்ஸ் மோதல்!

ஜன நாயகனில் நடித்துள்ளேன்: லோகேஷ் கனகராஜ்

SCROLL FOR NEXT