செய்திகள்

காந்தாரா - 2 பட்ஜெட் இவ்வளவா?

காந்தாரா இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

கன்னட  வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்!

 காந்தாரா முதல் பாகத்தின் பட்ஜெட் ரூ.16 கோடி என்பதுகுறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பிரதமா் மோடி இன்று கோவை வருகை: தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டைத் தொடங்கிவைக்கிறாா்

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT