முகப்பு
செய்திகள்

விமலின் துடிக்கும் கரங்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விமல் நடிப்பில் உருவாகியுள்ள  துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
பகிர்:

விமல் நடிப்பில் உருவாகியுள்ள  துடிக்கும் கரங்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, விமல் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லராக படமாக உருவாகி இருக்கிறது துடிக்கும் கரங்கள் திரைப்படம். இதில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார். மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். நீண்ட நாள்களாக இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  துடிக்கும் கரங்கள் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.