செய்திகள்

ஜெயிலரில் நடித்த ஜாஃபருக்கு ரஜினி கொடுத்த பரிசு என்ன?

ஜெயிலர் படத்தில் நடித்த ஜாஃபர் சாதிக்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் பரிசுப் பொருள் ஒன்று கொடுத்துள்ளார். 

DIN

ஜெயிலர் படத்தில் நடித்த ஜாஃபர் சாதிக்கிற்கு நடிகர் ரஜினிகாந்த் பரிசுப் பொருள் ஒன்று கொடுத்துள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும், தமிழகத்தில் 1,200 திரைகளிலும் வெளியானது.

இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

ஜாஃபர் சாதிக்

இப்படத்தில், துணை கதாபாத்திரம் ஒன்றில் ஜாஃபர் சாதிக் நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சண்டைக் காட்சி ஒன்றில் ரஜினி அணிந்திருந்த சன் கிளாஸை, ஜாஃபர் சாதிக்கிற்கு பரிசாக ரஜினி கொடுத்துள்ளார்.

இது குறித்து,  ஜாஃபர் சாதிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நா கேட்டேன், அவர் கொடுத்துட்டாரு, நன்றி சூப்பர் ஸ்டார்.’ என்று சன் கிளாஸ் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

பாவக் கதைகள், விக்ரம் படத்தில் நடிகர் ஜாஃபர் சாதிக் நடித்திருந்தார். தொடர்ந்து, சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திலும் இவர் நடித்திருந்தார். விரைவில் வெளிவரவிருக்கும் லியோ படத்திலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT