செய்திகள்

தலைவர் நிரந்தரம்: ஜெயிலர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இரண்டாவது வார இறுதி நாள்களை கடந்துள்ள ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் நேற்றிரவு ஜெயிலர் வெற்றியை முன்னிட்டு படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் ‘தலைவர் நிரந்தரம்’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ரம்யா கிருஷ்ணன், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT