செய்திகள்

சீரியல் நடிகையை கரம் பிடித்த பிரபல யூடியூபர்: வைரல் புகைப்படங்கள்!

சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட ஜனனியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

DIN

சீரியல் நடிகையை திருமணம் செய்துகொண்ட பிரபல யூடியூபர் இனியனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கண்மணி, சிவா மனசுல சக்தி உள்ளிட்ட தொடரின் மூலம் பிரபலமானார் நடிகை ஜனனி பிரதீப். இவர் வித்யா நம்பர் ஒன் தொடரில் நடித்த பிரபல யூடியூபரான இனியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமண விழாவில் சினிமா மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.


இனியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான முரட்டு சிங்கிள்ஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமானார்.


இவர்களது திருமணத்தில் சீரியல் நடிகை ஹரிப்பிரியா, பாடகர் சாம் விஷால் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜனனி - இனியன் தம்பதியினருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT