செய்திகள்

ஜவான்: ராமையா வஸ்தாவையா பாடல் எப்போது தெரியுமா? 

ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் நாட் ராமையா வஸ்தாவையா பாடல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் 3வது பாடலான ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் நாளை வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. 

1955இல் வெளியான ஸ்ரீ 420 எனும் ஹிந்திப் படத்தில் ராமய்யா வஸ்தாவய்யா பாடல் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆக. 30ஆம் நாள் சென்னையில் உள்ள தனியார் கல்லூர் ஒன்றில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT