நடிகை வரலட்சுமி 
செய்திகள்

நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன்!

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

DIN

சென்னை: போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை கடத்திய குற்றச்சாட்டில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய தலைவரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளர் என்பதும், போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் ஆதிலிங்கம் முதலீடு செய்துள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆதிலிங்கம் குறித்த தகவல்களை திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராக என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது.

தற்போது ஆந்திரத்தில் படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று வரலட்சுமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT