முகப்பு
செய்திகள்

இதர மாநிலங்களில் ரூ.200 கோடி வசூல்.. அசத்தும் ஜெயிலர்!

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தைத் தவிர்த்து இதர மாநிலங்களில் மட்டும் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது.

இந்த படம், முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, இரண்டாவது வார இறுதியில் ஜெயிலர் 14-வது நாளில் ரூ. 525 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்மூலம், 2.0 படத்துக்கு பிறகு ரூ. 500 கோடி வசூலைக் கடந்த ரஜினியின் படமாக ஜெயிலர் சாதனை படைத்தது. 

இந்நிலையில், தமிழகத்தைத் தவிர நாட்டின் பிற மாநிலங்களில் இப்படம் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.76.85 கோடியும் கர்நாடகத்தில் ரூ.62.9 கோடியையும் கேரளத்தில் ரூ.49.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.14.6 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல். தமிழகத்தில் ஜெயிலர் ரூ.175 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →