செய்திகள்

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அறுவை சிகிச்சை?

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

DIN

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தார். 

இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார். தற்போது, தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், பூஜா தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக 'குண்டூர்காரம்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். பின், திடீரென அப்படத்திலிருந்து விலகினார். மேலும், பவன் கல்யாணுடனான ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திலிருந்தும் அவர் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்குக் காரணம், ராதே ஷ்யாம் படப்பிடிப்பின்போது பூஜா ஹெக்டேவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக, ஒரு அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். ஆனால்,  கால் வலி தொடர்வதால் அவர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT