முகப்பு
செய்திகள்

பிரம்மாண்டமாக வெளியானது அனிமல்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படம் இன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியானது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:19 PM
பகிர்:

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

அனிமல் படத்தின் டிரைலர் காட்சி

இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல்  வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் இன்று உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →