செய்திகள்

அனிமல்: முதல் நாளில் வசூல் சாதனை!

நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள அனிமல் படத்தின் முதல்நாள் வசூல் விவரத்தினை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

DIN

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல்  வில்லனாக நடித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும்  நேற்று (டிச.1)  உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியானது.

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதுதான் ஹிந்தி சினிமா வரலாற்றில் விழாக் காலங்களில் அல்லாத நாள்களில் வெளியாகி அதிகம் வசூலித்த முதல் படம் என அனிமல் படக்குழு தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT