செய்திகள்

நடிகை த்ரிஷாவின் அனிமல் பட விமர்சனம்: சர்ச்சையானதை தொடர்ந்து நீக்கம்!

நடிகை த்ரிஷா அனிமல் படம் குறித்து கூறிய பதிவு சர்ச்சையாகவே அந்தப் பதிவினை நீக்கியுள்ளார். 

DIN

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல்.

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் 2வது நாளில் ரூ.236 கோடி வசூலித்துள்ளது. 

இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரே வார்த்தை- கல்ட். ப்ப்பாஆஆஆஆஆ...” உடன் கைத்தட்டல் எமோஜிக்களுடன் பதிவிட்டிருந்தார். பின்னர் விமர்சங்கள் வரவே அந்த ஸ்டோரியை நீக்கியுள்ளார். 

கடந்த சில நாள்களுக்கு முன்பாக மன்சூர் அலிகான் சர்ச்சையில் சிக்கியபோது பெண்களுக்கு மரியாதை இல்லை எனக்ம்கூறியவர் தற்போது பெண்களுக்கு எதிரான படத்தினை புகழ்வதா என சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT